Photography basics 04:
புகைப்படக்கலை பற்றி திரு அன்புமுனுசாமி அவர்களின் புகைப்பட கலையின் அடிப்படை பதிவுகளை இங்கு பகிர்ந்து வருகிறோம். அந்த வரிசையில் இது நான்காம் பதிவு. சென்ற பதிவில் ஒரு தனிப்பட்ட நபர்களின் தனிப்பட்ட புகைப்படம் எடுப்பதை பற்றி பற்றி கண்டோம். இங்கு ஒரு தனிப்பட்ட நபர்களின் முழு அளவு புகைப்படம் எடுப்பதை பற்றி காண இருக்கிறோம்.
Individual Photography for single person (Full Size):
ஆண்களின் தனிப்பட்ட (Individual) படப்பிடிப்பு:
ஆண்களின் தனிப்பட்ட (Individual) படப்பிடிப்பில், தோரணைகள் (poses) அனைத்தும் எளிமையாகத் தான் இருக்கும்.
ஆனால் எப்படி நிறுத்துவது என்கின்ற சிக்கலும், கையை எங்கே வைத்துக் கொள்வது என்ற குழப்பமும் இருந்து கொண்டே இருக்கும்.
ஆகவே அதிகப்படியாக பயன்படுத்தும் இடம் பேண்ட் பாக்கெட்டாகத்தான் இருக்கும்.
கைகளை எங்கு வைப்பது என்தில், ஆண்களுக்கு உண்மையில் ஒரு சிக்கல் உள்ளது; அவற்றை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பக்க பைகளில் வைத்திருப்பதன் மூலம், இயற்கையான மற்றும் இயல்பான போஸை எடுக்க உங்களுக்கு உறுதியான வழியாக உள்ளது.
நிமிர்ந்து நிற்கும் மனிதனுக்கு இது ஒரு சாதாரண போஸ். மேலும், இந்த போஸில் வலது தோளை சற்று கீழறக்கி வலது காலில் 75% அழுத்தம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
இந்த அமைப்பில் சிறு மாறுபாடு செய்யலாம் எப்படி என்று பார்க்கலாமா?
அதாவது முந்தைய போஸில் ஒரு சிறிய மாறுபாடு.
தோள்பட்டைக்கு மேல் ஒரு துண்டு, மேல் சட்டை, அல்லது கோட் போன்ற ஆடையை போட்டுக்கொண்டு, பேண்ட் பாக்கெட்டில் ஒரு கட்டைவிரல் நுழைத்து கொள்ள வேண்டும்.
படத்தில் உள்ளது போல், கால்களை பின்னியபடி நின்று, வலது தோளை சற்று தாழ்த்தியும், இடது தோளை சற்றே உயர்த்தியும், தலையை நேராக நிறுத்தி கேமராவை பார்த்து குறுநகை செய்தல் வேண்டும்.
(இந்த தோரணைக்கு பனியன் போன்ற உள்ளாடை அவசியம்.)
இப்படி கிளிக் செய்தால் படம் சூப்பராக அமையும்.
அடுத்த பதிவில் தனிமனிதனின் அமர்ந்த புகைப்படம் பற்றி காணலாம்.
அடுத்த பதிவில் சந்திக்கலாம். நன்றி!
Anbu Munusamy
9865582442
Kanchipuram
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
நண்பர்களுக்கு வணக்கம்… தொடர்ந்து இந்த தளம் இனிமேலும் இயங்க எங்களால் முடிந்த அளவு முயற்சிக்கிறோம். உங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள். புகைப்பட கலைஞர்களின் நலனிற்காகவே தொடர்ந்து காணொளிகளை பதிவேற்றி வருகிறோம். பல பல இலவசங்களை போட்டோஷாப் மற்றும் புகைப்பட துறை சார்ந்த நண்பர்களுக்கு வழங்கி வருகிறோம். எனவே தங்களுக்கு இந்த தளம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து இந்த சேவையை மேலும்மேலும் தொடர உதவுங்கள். நன்றிகள்.
மேலும் போட்டோஷாப் & போட்டோகிராபி குறித்த காணொளிகளை காண:
website – https://thendralbarathi.com/
YouTube – YouTube
-தென்றல் பாரதி
போட்டோஷாப் சார்ந்த காணொளிகளை காண நமது பக்கத்தினை பார்க்கவும்
https://www.youtube.com/c/ThendralBarathiPhotography
How to Create 3D Effect in Photoshop
How to Create 3D Effect in Photoshop
0 Comments