Photography Basics 06 – Individual Photography for single person With Wall

by | Dec 24, 2021 | Photography tips and tricks

Photography basics 06:

புகைப்படக்கலை பற்றி திரு அன்புமுனுசாமி அவர்களின் புகைப்பட கலையின் அடிப்படை பதிவுகளை இங்கு பகிர்ந்து வருகிறோம். அந்த வரிசையில் இது ஆறாம் பதிவு. சென்ற பதிவில் ஒரு மனிதனின் முழு அளவு புகைப்படம் பற்றி கண்டோம். அதன் தொடர்ச்சியாக தனி மனிதனுடன் ஒரு சுவற்றினை மையப்படுத்தி படம் பதிவு செய்வதைப்பற்றி இங்கு காணலாம்

Individual Photography for single person With Wall

Subject: Single Men Posing.

நாம் ஒவ்வொரு பதிவிலும் சொல்வதுதான் அதாவது ஆண்கள் தோரணைகள் மிகவும் எளிமையானது எந்த கோணத்தில் நின்றாலும் பெரும்பாலாக பயன்படுத்தக்கூடிய இடம் பேண்ட் பாக்கெட்டாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த போஸும் சுவற்றில் சாய்ந்தவாறு நின்று கொண்டு ஒரு காலை மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் இந்த போஸில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், சுவற்றில் இருந்து ஒரு அடி இடைவெளியில் நின்று கொண்டு இடுப்புப் பகுதி மட்டும் சுவற்றில் படுமாறு வைத்துக் கொண்டு 90 டிகிரி கோணத்தில் பார்க்க வேண்டும் இது மிகவும் சுலபமான ஒரு தோரணை.

இதேவகையில் இன்னுமொரு தோரணையை காணலாம்:

கடந்த பதிவில், ஆணின் தனிப்பட்ட போஸில் சுவற்றில் பின்பக்கமாக முதுகு படும்படியாக நிறுத்தப்பட்டிருந்தார்.

இந்தப் பதிவில், சற்று வேறுபட்டு பக்கவாட்டில் சாய்ந்து நிற்பது போன்று தோரணை அமைக்கப்பட்டுள்ளது.

இதுவும் ஒரு எளிமையான தோரணை தான். சுவற்றில் இருந்து ஒரு அடி தள்ளி நின்று, தோல்பட்டை மட்டும் சுவற்றில் படுமாறு 24 டிகிரி சாய்ந்து நின்று கால்களை எக்ஸ் போல் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த தோரணையில் இயல்பாகவும், யதார்த்தமாகவும் கேமராவில் பார்வையை செலுத்தி சிறு புன்னகையுடன் படத்தை பதிவு செய்ய வேண்டும்.

சாதாரண மற்றும் முறையான காட்சிகளுக்கு நன்றாக வேலை செய்கிறது.

அடுத்த பதிவில் சந்திக்கலாம்… நன்றி!

Anbu fotos
9865582442
Kanchipuram

⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

நண்பர்களுக்கு வணக்கம்… தொடர்ந்து இந்த தளம் இனிமேலும் இயங்க எங்களால் முடிந்த அளவு முயற்சிக்கிறோம். உங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள். புகைப்பட கலைஞர்களின் நலனிற்காகவே தொடர்ந்து காணொளிகளை பதிவேற்றி வருகிறோம். பல பல இலவசங்களை போட்டோஷாப் மற்றும் புகைப்பட துறை சார்ந்த நண்பர்களுக்கு வழங்கி வருகிறோம். எனவே தங்களுக்கு இந்த தளம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து இந்த சேவையை மேலும்மேலும் தொடர உதவுங்கள். நன்றிகள்.

 

மேலும் போட்டோஷாப் & போட்டோகிராபி குறித்த காணொளிகளை காண:

website – https://thendralbarathi.com/

https://www.youtube.com/channel/UC9pIt6n02xeZgFk-cWiN_8w

YouTube – YouTube

-தென்றல் பாரதி

போட்டோஷாப் சார்ந்த காணொளிகளை காண நமது பக்கத்தினை பார்க்கவும்

https://www.youtube.com/c/ThendralBarathiPhotography 

 

How to Create 3D Effect in Photoshop

 

How to Create 3D Effect in Photoshop

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *